"Welcome To Popcornnewz.com/Matrimony, A Genuine Matrimonial Website With A True Commitment To Serve People..... We Seek Your Support & Cooperation For This Absolutely Free Service."


உடல் நிறை சுட்டெண்(BMI):   உங்களது BMI ஐ கண்டறிய.....

ஐஸ்வர்யா ராய் போல ஆக:

உடல் எடை கூடாமல் இருப்பதற்கு சாப்பிடுவதற்கு முன் ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். காலையில் வயிற்றிற்கு தேவையான அளவிற்கு நன்கு சாப்பிட வேண்டும். மதிய சாப்பாடு முக்கால் வயிறு நிரம்ப மட்டுமே சாப்பிட வேண்டும். இரவில் அரை வயிற்று சாப்பாட்டோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். இரவு சாப்பாட்டையும் ஏழு மணிக்குள்ளாகவே சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வர உடல் இளைத்து ஐஸ்வர்யா ராய் போல் இருக்கலாம்.

கண் பாதுகாப்பு:

கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் போக உருளைகிழங்கை துருவி சாறு பிழிந்து பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்து வர சில நாட்களில் கருப்பு வளையம் நீங்கி விடும்.

சோர்வான கண்களுக்கு ஐஸ் தண்ணீரை பஞ்சில் நனைத்து சற்று நேரம் வைக்க கண்கள் புத்துணர்வுடன் காணப்படும்.

கண்ணுக்கு கீழ் உள்ள பை நீங்க வெதுவெதுப்பான தேநீரை பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைக்க சரியாகிவிடும்.

எண்ணெய் மசாஜ்:

ஆலிவ் எண்ணையோடு உப்பு அல்லது சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மார்பகங்கள் நீங்கலாக உடம்பின் மற்ற பாகங்கள் மேல் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்தால் உடல் நன்கு மினுமினுப்படையும்.