புடலங்காய் பொரியல்
தேவையானவை

புடலங்காய்: 2 (நறுக்கியது)
கடலைப்பருப்பு: 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய்: 2
பெரிய வெங்காயம்: 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை: சிறிது
தேங்காய்துருவல்: 3 தேக்கரண்டி
வற்றல்: 6
சீரகம்: கால் தேக்கரண்டி
கடலைப்பருப்பு: கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு: கால் தேக்கரண்டி
எண்ணெய்: தேவையான அளவு
உப்பு: தேவையான அளவு

செய்முறை:
தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம், கடலைபருப்பு இவற்றை நன்றாக அரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து வற்றல், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின்னர் புடலங்காயை போட்டு சற்று தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். பின் உப்பு, அரைத்த தேங்காய் விழுதை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும். (கூட்டு வகைகள் சற்று கெட்டியாக இருக்க வேண்டும். எனவே தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைக்கவும்.)
கத்தரிக்காய் தேங்காய் கூட்டு
புடலங்காய் பொரியல்
காலிபிளவர் பொரியல்
உருளைக்கிழங்கு பட்டாணி மசால்
கீரை பொரியல்
ஸ்பைசி மொச்சை சுண்டல்
பருப்பு பச்சடி
ப்ரக்கோலி மசாலா
பாகற்காய் கூட்டு
மாங்காய் பச்சடி